கோவையில் கடந்த 3 மாதங்களில் 108 ஆம்புலன்சில் 21 குழந்தைகள் பிறப்பு..!

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 21 குழந்தைகள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிறந்துள்ளன.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் 21 குழந்தைகள் பிறந்துள்ளன.

இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட அதிகாரி கோபாலகிருஷ்ணன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப அலுவலர்களுக்கு மனித உயிரை காக்கும் முதலுதவி சிகிச்சைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் 108 ஆம்புலன்சில் இருபத்தொரு பிரசவங்கள் நடந்துள்ளன. பல்வேறு இடங்களில் சாலை வேலை நடப்பதால் ஆம்புலன்சில் வேகம் குறைகிறது. இதனால், ஏற்படும் தாமதம் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்களில் பிரசவங்கள் நடக்கின்றன.

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் 21 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், தாய் - சேய் இருவருக்கும் எந்த பாதிப்பும் இன்றி பிரசவம் நடந்துள்ளது, என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...