கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உண்டியல் வழங்கிய 'TransMom' என்ற திருநங்கைகள் அறக்கட்டளை..!

சிறுசேமிப்பு முக்கியத்துவம் குறித்தும், திருநங்கைகள் மீதான சமூக ரீதியான தவறான கண்ணோட்டம் குறித்தும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம் என தெரிவித்தனர்.


கோவை: சிறுசேமிப்பு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வகையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருநங்கைகள் உண்டியல் வழங்கினர்.

கோவையை சேர்ந்த 'ட்ரான்ஸ்மாம்' என்ற திருநங்கைகள் நல அறக்கட்டளை அமைப்பு சார்பாக கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சிறு சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர் திருநங்கை அனுசியா முன்னிலை வகித்தார்.



இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறு சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பண சேமிப்பு பெட்டகம் (உண்டியல்) வழங்கப்பட்டது.



உண்டியலை தரும்போது, அதில் 1-ரூபாய், 5- ரூபாய் வரை காசுகள் போட்டு தரப்பட்டது.



அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.



முன்னதாக TransMom அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பேசும்போது, சிறுவயதிலிருந்தே சிறுசேமிப்பு மிகவும் முக்கியம் என்பதால் உண்டியலைப் பள்ளி மாணவர்களுக்குத் தந்துள்ளோம்.

இதுதவிர திருநங்கைகள் மீது சமூக ரீதியான தவறான கண்ணோட்டம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்று தெரிவித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் TransMom அறக்கட்டளையின் உறுப்பினர்களான திருநங்கைகள் மதுரா, ஸ்ரீமதி, கார்த்திகா, ஷாரிகா, ரக்ஷனா, மெல்லினா, பிரவீனா, கார்த்திக், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...