மாடு அறுவைமனைகளில் 'கட்டணக்கொள்ளை'.. இறைச்சி விற்பனையாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

மனு அளிக்க வந்த விற்பனையாளர்கள் இரண்டு காளை கன்றுகளை அழைத்து வந்து, அதன் கழுத்துகளில் கட்டணக்கொள்ளை என எழுதிய பதாகைகளை தொங்க விட்டபடி மனு அளிக்க வந்தனர்.



கோவை: மாடு அறுவைமனைகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என கன்றுகுட்டியுடன் இறைச்சி விற்பனையாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோவை சத்தி சாலை மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் மாடு அறுவைமனைகள் செயல்பட்டு வருகின்றது.



இதில் காளை மாடு மற்றும் கன்றுகளை வெட்ட இறைச்சி விற்பனையாளர்கள் 10 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்நிலையில் இந்த அறுவைமனைகளை ஏலம் எடுத்துள்ள அஸ்லம் அலி மற்றும் இப்ரஹீம் பாதுஷா ஆகிய இருவரும், மாட்டுக்கு 300 முதல் 500 ரூபாய் வரையிலும், கன்றுகுட்டிகளுக்கு 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாகவும், இதற்கு உரிய ரசீதுகளும் தருவதில்லை எனவும் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



மனு அளிக்க வந்த விற்பனையாளர்கள் இரண்டு காளை கன்றுகளையும் அழைத்து வந்தனர்.



அதன் கழுத்துகளில் கட்டணக்கொள்ளை என எழுதிய பதாகைகளையும் தொங்க விட்டபடி மனு அளிக்க வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து இறைச்சி விற்பனையாளர்கள் புகார் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...