கோவையில் டெங்கு பரவலை தடுக்க 'அபேட்' மருந்து தெளிப்பு பணிகள் தீவிரம்..!

மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று 'அபேட்' மருந்தை தொட்டிகளில் ஊற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, பொது மக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா என்பதை கண்டறிவது போன்ற பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா அறிவுறைகள்‌ வழங்கினார்‌.



இதேபோல், மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.33-க்குட்பட்ட பியூன்ஸ்‌ காலனி, டேங்க்‌ ரோடு ஆகிய பகுதிகளில்‌ தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



உடன்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மேற்கு மண்டல குழு தலைவர்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ சரவணன்‌, 33-வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ எ.கிருஷ்ணமூர்த்தி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்.‌



மேலும், கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.9-க்குட்பட்ட விளாங்குறிச்சி, கிராம நிர்வாக அலுவலகம்‌ அருகில்‌ உள்ள வாய்க்காலை நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ நடைபெற்றது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...