ஒரு நாளில் 3,300 லிட்டர் டீசல் மிச்சப்படுத்தும் கோவை கோட்ட போக்குவரத்து கழகத்துக்கு, தேசிய அளவில் இரண்டாம் இடம்..!

எரிபொருள் சேமிப்பில் இலக்கை எட்டியதற்காக, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு பரிசுத்தொகை, கேடயம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, கோவை கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகத்திடம், தேசிய பெட்ரோலியத்துறை அமைச்சக செயலர், பங்கஜ் ஜெயின் வழங்கினார்.


கோவை:தேசிய அளவில் எரிபொருள் சிக்கனத்தில் இரண்டாம் இடம் பெற்றதற்காக, அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்டத்துக்கு, பரிசுக் கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் செயல்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 

சிக்கனமாக டீசல் பயன்படுத்திய போக்குவரத்து கழகங்களுக்கு, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென நாட்டின் அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கோட்டங்களின் செயல்பாடும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 

இதில், கிராமப்புற சேவைக்கென இயக்கப்படும் பேருந்துகளின் மைலேஜ் 5.37 இல் இருந்து 5:57 ஆக உயர்ந்துள்ளதால், நாள் ஒன்றுக்கு 3,300 லிட்டர் டீசல் வரை மிச்சப்படுத்த முடிந்ததாக கோவை கோட்ட போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

அந்த வகையில், எரிபொருள் சேமிப்பில் இலக்கை எட்டியதாக, கோவை கோட்ட 

அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய அளவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. 

இதற்கான, பரிசுத்தொகை, கேடயம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, கோவை கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகத்திடம், தேசிய பெட்ரோலியத்துறை அமைச்சக செயலர், பங்கஜ் ஜெயின் வழங்கினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...