கோவையில் உள்ள நியாய விலை கடையில், பிரதமர் மோடி படம் மாட்டிய பாஜக தலைவர் அண்ணாமலை..!

நேற்று மாலை சித்ரா அடுத்த கோல்டு வின்ஸ், துரைசாமி நகரில் உள்ள நியாய விலை கடை ஒன்றில் பொதுமக்களிடம் மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசிய அண்ணாமலை, தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தின் அருகே பிரதமர் மோடியின் படத்தை மாட்டினார்.


கோவை: பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று மாலை சித்ரா அடுத்த கோல்டு வின்ஸ், துரைசாமி நகரில் உள்ள நியாய விலை கடை ஒன்றிற்கு சென்றார். அங்கிருந்த பொதுமக்களிடம் மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசிய அவர், அதை தொடர்ந்துநியாயவிலை கடைக்குள் சென்று அங்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தின் அருகே பிரதமர் மோடியின் படத்தை மாட்டினார். 



இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படத்தை மாட்ட வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வரும் நிலையில்,கோவை திருமலையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்களுக்குள் பிரதமர் மோடியின் படத்தை பாஜகவினர் மாற்ற முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. 



இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ஆலந்துறை அடுத்த பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நுழைந்து பாஜக ஆதரவாளர்கள் பிரதமர் மோடியின் படத்தை மாட்டிய போது ஏற்பட்ட பிரச்சனையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...