நேற்று மாலை சித்ரா அடுத்த கோல்டு வின்ஸ், துரைசாமி நகரில் உள்ள நியாய விலை கடை ஒன்றில் பொதுமக்களிடம் மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசிய அண்ணாமலை, தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தின் அருகே பிரதமர் மோடியின் படத்தை மாட்டினார்.
கோவை: பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று மாலை சித்ரா அடுத்த கோல்டு வின்ஸ், துரைசாமி நகரில் உள்ள நியாய விலை கடை ஒன்றிற்கு சென்றார். அங்கிருந்த பொதுமக்களிடம் மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசிய அவர், அதை தொடர்ந்துநியாயவிலை கடைக்குள் சென்று அங்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தின் அருகே பிரதமர் மோடியின் படத்தை மாட்டினார்.

இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படத்தை மாட்ட வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வரும் நிலையில்,கோவை திருமலையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்களுக்குள் பிரதமர் மோடியின் படத்தை பாஜகவினர் மாற்ற முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ஆலந்துறை அடுத்த பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நுழைந்து பாஜக ஆதரவாளர்கள் பிரதமர் மோடியின் படத்தை மாட்டிய போது ஏற்பட்ட பிரச்சனையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.