கோவை கிணத்துக்கடவில் தனியார் பேருந்து படிக்கட்டு வழியாக தவறி விழுந்த கல்லூரி மாணவன் படுகாயம்..!

அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாய் போலீசில் புகார் அளித்தார்.


கோவை: கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் தனியார் பேருந்து படிக்கட்டு வழியாக தவறி விழுந்த கல்லூரி மாணவன் படுகாயம் அடைந்தார்.

உடுமலைப்பேட்டை இராவணபுரம் இந்திராநகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் என்பவரின் மனைவி கனகமணி இவரது மகன் நந்தகுமார்(21) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 9ம் தேதி மாலை கோவையிலிருந்து உடுமலைக்கு தனியார் பேருந்தில் ஏறி வந்தார்.

கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் அருகே பேருந்து வந்து கொண்டிருக்கும்போது திடீரென படிக்கட்டு வழியாக நந்தகுமார் தவறி கீழே விழுந்தார்.

இதில் நந்தகுமாருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நந்தகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் நந்தகுமாரின் தாய் கலாமணி இன்று புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...