கோவை தனியார் மனநல காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை: உரிய விசாரணை நடத்த மாதர் சங்கம் வலியுறுத்தல்..!

இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் நியாயமான முறையில் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கம் வலியுறுத்தல்.


கோவை: கோவை மேட்டுபாளையத்தில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வாட்ச்மேனால் கர்ப்பமாகி உள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையீடு செலுத்திட வேண்டும் என அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா அளித்துள்ள புகாரில்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பழைய நகராட்சி கட்டிடத்தில் இயங்கி வரும் ஹெல்பிங் ஹார்ட்டி என்னும் தனியார் மனநல காப்பகம் இயங்கி வருகிறது.

இங்கு 25 க்கும் மேற்பட்ட பெண்களும், 25 க்கும் மேற்பட்ட ஆண்களும் ஒன்றாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பகத்தில் தங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்ப்பமுற்ற நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகத் தகவல் தெரிந்தது.

இதனையடுத்து மாதர் சங்கத்தின் சார்பில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தோம். எங்கள் அமைப்பின் சார்பிலும் காப்பகம் சென்று விசாரித்தோம். அங்கு காப்பகத்தில் பெண்களுக்கென்று தனி கழிவறைகள் இல்லை.

பாதுகாப்பான சூழலும் இல்லை. அச்சம்பவம் நடைபெற்ற பிறகு அங்கிருந்த ஆண்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் காவலாளி தேவராஜ் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் நியாயமான முறையில் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உரிய விசாரணை நடத்தினால் மேலும் பல குற்றவாளிகள் பிடிபட வாய்ப்புள்ளது. மேலும் தனியார் நடத்துகின்ற இந்த மனநல காப்பகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...