கோவையில் மனு அளிக்க வந்த AITUC அமைப்பினர் திடீரென கண்டன முழக்கங்களை எழுப்பியதால் கைது..!

கட்டுமான தொழிலாளர்கள் சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்த AITUC அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென கண்டன முழக்கங்களை எழுப்பியதால் காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: AITUC அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென கண்டன முழக்கங்களை எழுப்பியதால் காவல்துறையினர் கைது செய்தனர்.



தமிழக AITUC கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் மாநில துணை பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

"பெண் கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வு பெறும் வயதை 50 வயது ஆக குறைக்க வேண்டும். திமுகவின் முந்தைய ஆட்சிக்காலத்தில் 60 வயது நிறைவடைந்த இந்த பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் போதிய ஊதியம் வழங்க வேண்டும்.

மாதம் 6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு ஐந்து லட்சம் ரூபாயும் விபத்தில் உயிரிழந்தார். 10 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் வாரியம் ஏற்க வேண்டும்.



ESI மருத்துவமனையில் மருத்துவ வசதி செய்து தர வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று அவர்களது கோரிக்கை பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.



காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் சாலையில் திடீரென முழக்கங்களை எழுப்பியதால் காவல்துறையினர் 50-க்கும் மேற்பட்ட கோவை மாவட்ட AITUC கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...