கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் மோதி கோர விபத்து - அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

விபத்தில் தலை முற்றிலும் நசுங்கியதால் இறந்த நபர் குறித்து விவரங்கள் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டம் போட்ட லுங்கி மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்திருக்கும் இந்த நபர் குறித்த தகவல்களை கே.ஜி. சாவடி காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம்.


கோவை: கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை, திருமலையம்பாளையம் சந்திப்பு அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் தலை நசுங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், இறந்த நபர் நெடுஞ்சாலையில் வந்த போது அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.



விபத்தில் தலை நசுங்கி சடலமாக மீட்கப்பட்டவர் யார்? எங்கிருந்து வந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் கட்டம் போட்ட லுங்கி மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்ததாகவும், தலை முழுவதும் டயர் ஏறியதில் நசுங்கியதால் அடையாளம் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே, இறந்த இந்த நபர் குறித்த தகவல் ஏதேனும் கிடைத்தால் கே.ஜி சாவடி போலீசாரை அணுகலாம் என தெரிவித்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் குறித்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...