கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஆய்வு - நீர், நிலம் மாசை தடுக்க தீவிர நடவடிக்கை…!

வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஒரே இடத்தில் கொட்டப்படுவதால், நிலத்தடி நீர், நிலம் மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க தரம் பிரிக்கும் பணிகளை மேற்கொள்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை வெள்ளலூர் குப்பை குடங்கில் கொட்டும் மழையில், கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் சுகாதார குழுவினர், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வரும் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் கூறும் போது:-

தமிழக முதல்வர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அறிவித்துள்ளார். நீர் நிலம் மாசு தவிர்க்க பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னெடுத்துள்ளார். கோவை மாநகராட்சியிலும் தூய்மையான காற்று, நீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பணிகளை செய்து வருகிறோம்.

கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து தர வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் ஆய்வு செய்தோம்.

பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம், கோவை மாநகரத்தில் மாசு இல்லாத நகராக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் சுகாதார அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம்.

குறிப்பாக வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஓரே இடத்தில் கொட்டப்படுவதால், நிலத்தடி நீர், நிலம் மாசு ஏற்படுகிறது. தற்போது நீர், காற்று மாசு ஏற்படாமல் எவ்வாறு தரம் பிரிக்கும் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசித்துள்ளோம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...