கோவை விழா: லேசர் விளக்குகளில் ஜொலித்த வாலாங்குளம்; அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து, பாராட்டு.

நடைபெறும் 14 வது கோவை விழாவையொட்டி, உக்கடம் வாலாங்குளத்தில் லேசர் விளக்கு கண்காட்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார்.


கோவை: நடைபெறும் கோவை விழாவையொட்டி, உக்கடம் வாலாங்குளத்தில் லேசர் விளக்கு கண்காண்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார். 



குளத்தில் உள்ள நீரைபல அடி தூரம் பீச்சி அடித்து, அதில் 20-க்கும் மேற்பட்ட வண்ண நிறங்களிலான லேசர் விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டன.இதனை பொதுமக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.நிகழ்ச்சியில்,தேசியபற்று பாடல்கள், திரைப்பட பாடல்கள் என பாடலுக்கு ஏற்றவாறு லேசர் விளக்குகளின் அசைவு இருந்தது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 



இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி: தமிழ் கொஞ்சி விளையாடும் கோவையில், ஒரு வார காலம் மிக சிறப்பாக நடைபெறுகின்ற இந்த கோவை விழா நிகழ்வில் இன்று"லேசர் ஷோ" மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையின் ஒரு பரிணாம வளர்ச்சியாக, ஒட்டுமொத்தமாக கோவை மக்களுடைய ஒரு திருவிழாவாக இந்த கோவைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



14 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற இந்த கோவைவிழா, கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது, தற்போது, நோய் தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் கோவை விழா பிரம்மாண்டமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. 



மருத்துவம், கல்வி , தொழில், மோட்டார் உற்பத்தி என அனைத்திலும் சிறந்து விளங்குகின்றன அழகு தமிழ் பேசும், கோவையில் மிகச் சிறப்பாக, இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு வார கால திருவிழா ஒட்டுமொத்த கோவை மக்களின் திருவிழா. 



இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள அனைத்து அமைப்புகளும் பாராட்டுக்கள். இந்த விழா மேலும் சிறப்படைய அரசு நிச்சயம் உறுதுணையாக இருக்கும், என்று அமைச்சர் தெரிவித்தார். 



இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கோவை மாநகர காவல் ஆணையர், கோவை மேயர், துணை மேயர் உட்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...