தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து கோவையில் அ.ம.மு.க வினர் ஆர்ப்பாட்டம்.

கோவை கணபதி பகுதியில் அ.ம.மு.க  வின் கோவை மத்திய மாவட்ட கழக செயலாளர், அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், சொத்துவரி உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.


கோவை: தமிழக அரசு சொத்து வரியை 150% ஆக உயர்த்தி உள்ளதை கண்டித்து பல்வேறு இடங்களில் அதிமுக, பாஜக உட்பட பல்வேறு அமைப்புகள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டங்கள்நடைபெற்று வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக,இன்று கோவை கணபதி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மத்திய மாவட்ட கழக செயலாளர், அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வா முன்னிலை வகித்தார். 



ஆர்பாட்டத்தில், கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்ட அமமுக வினர், பதாகைகளை ஏந்திக் முழக்கங்களை எழுப்பினர். இந்த சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு உடனடியாக சொத்து வரி உயர்வை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...