கோவை கணபதி பகுதியில் அ.ம.மு.க வின் கோவை மத்திய மாவட்ட கழக செயலாளர், அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், சொத்துவரி உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
கோவை: தமிழக அரசு சொத்து வரியை 150% ஆக உயர்த்தி உள்ளதை கண்டித்து பல்வேறு இடங்களில் அதிமுக, பாஜக உட்பட பல்வேறு அமைப்புகள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டங்கள்நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக,இன்று கோவை கணபதி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மத்திய மாவட்ட கழக செயலாளர், அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வா முன்னிலை வகித்தார்.

ஆர்பாட்டத்தில், கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்ட அமமுக வினர், பதாகைகளை ஏந்திக் முழக்கங்களை எழுப்பினர். இந்த சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு உடனடியாக சொத்து வரி உயர்வை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.