கோவையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கல்லூரிக்கு வந்த இளைஞர் மீது கன்டைனர் லாரி மோதி பலி.

கோவை மதுக்கரை நெஞ்சாலையில் இன்று மாலை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுக்கரை போலீசார் விசாரணை.


கோவை: கோவை மதுக்கரை நெஞ்சாலையில் இன்று மாலை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, விட்டு வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை, பாலத்துறை சாலை மார்பிள் கார்டனை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மகன் பிரிக்கிஸ்குமார்(22), ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று அக்கல்லூரியில் பட்டமளிப்புவிழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ளகல்லூரிக்கு வந்த பிரிக்கிஸ்குமார், விழாவில் கலந்துக் கொண்டு,

பட்டம் பெற்றபின் மீண்டும் மாலை தனது இரு சக்கர வாகனத்தில், பாலக்காடு நெடுஞ்சாலை மதுக்கரை சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது, அவர் இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த கன்டைனர் லாரி, பிரிக்கிஸ்குமார் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில், தூக்கிவீசப்பட்டஅவர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார் பிரிக்கிஸ்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...