கோவை மதுக்கரை நெஞ்சாலையில் இன்று மாலை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கரை போலீசார் விசாரணை.
கோவை: கோவை மதுக்கரை நெஞ்சாலையில் இன்று மாலை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, விட்டு வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை, பாலத்துறை சாலை மார்பிள் கார்டனை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மகன் பிரிக்கிஸ்குமார்(22), ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அக்கல்லூரியில் பட்டமளிப்புவிழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ளகல்லூரிக்கு வந்த பிரிக்கிஸ்குமார், விழாவில் கலந்துக் கொண்டு,
பட்டம் பெற்றபின் மீண்டும் மாலை தனது இரு சக்கர வாகனத்தில், பாலக்காடு நெடுஞ்சாலை மதுக்கரை சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர் இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த கன்டைனர் லாரி, பிரிக்கிஸ்குமார் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில், தூக்கிவீசப்பட்டஅவர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார் பிரிக்கிஸ்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.