சொத்தை விற்று தான், சொத்து வரியை கட்ட வேண்டும் போல - கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக போராட்டம்

திமுக "கொலுசு" பார்ட்டி; உதயசூரியன் சின்னத்தை "கொலுசு" சின்னமாக மாற்றி கொள்ளலாம் என்று கோவையில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாடினார்.



கோவை: தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபார்க் பகுதியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



முன்னாள் எம்பி சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு "சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும், சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்" ஆகிய பதாதைகளை ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.



ஆர்பாட்டத்தின் போது, செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர், சி.பி ராதாகிருஷ்ணன், "சொல்வதை செய்வோம், என்று கூறி ஆட்சிக்கு வந்து விட்டு சொல்லாததை எல்லாம் செய்பவர்கள் தான் திமுகவினர். சொத்தையே விற்று கட்டுவது, போல் சொத்து வரியை உயர்த்தி உள்ளதாகத் குற்றம் சாட்டினர்.



அதிமுகவினர் மத்திய அரசிடமிருந்து தேவையானவற்றை பெரும் போது, அடிமை அரசு என கூறிய திமுக, தற்போது அனைத்திற்கும் டெல்லியை எதிர்பார்த்து கொண்டிருப்பதாகவும், கையாளாகாத அரசு ஆட்சி பொறுப்பில் உள்ளதாகவும் கூறினார்.

காமராஜருக்கு சுவிட்ஸ் வங்கியில் கணக்கு உள்ளதாக கூறி வந்தவர்கள் தான் திமுகவினர். திமுக பெற்றுள்ள கடைசி வெற்றி இந்த வெற்றி தான் என்றும் திமுக கட்சியின் பெயரை கொலுசு பார்ட்டி என்றும் அவர்களது உதயசூரியன் சின்னத்தை கொலுசு சின்னமாக மாற்றி வைத்துக் கொள்ளலாம் என்று சாடினார்.



திமுக அரசு மத்திய அரசுதான் சொத்து வரியை உயர்த்தியதற்கு காரணம் என்று கூறினால், அதற்கான ஆவணங்களை காண்பிக்குமாறு தெரிவித்த அவர், திமுகவினருக்கு பக்கவாத்தியங்கள் மீதான நம்பிக்கை தான் அதிகம் என பாலகிருஷ்ணன், திருமாவளவன், வைகோ ஆகியவர்களை சுட்டிக்காட்டினார்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் வாக்குறுதிகள் சொல்லாமலேயே, பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு தான் என்றும் ஆனால், திமுக அரசு கூறியதை சரிவர செய்யவில்லை எனவும் வேதனையோடு பெட்ரோல் விலையை உயர்த்துகின்ற சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளதாகவும் தெரிவித்தார்.

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வரும் பொழுது பெட்ரோல் விலை குறையும் எனவும் தெரிவித்தார். போர் சூழலின்

காரணத்தால் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் சூழலை, இனி குறைந்து கொண்டே வரும் சூழலாக மாற்றுவோம் எனவும் தெரிவித்தார்."

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...