பூங்காக்கள், நடுநிலை பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சியின் துறைரீதியான அதிகாரிகளை அழைத்து வந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சி 22-வது வார்டில் உள்ள பூங்காக்கள், நடுநிலை பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக கவுன்சிலர் கோவை பாபு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆர் கார்டன், கோ-ஆப்ரேட்டிவ் காலனி பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு சொந்தமான இடங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது மற்றும் குடிநீர் தொட்டி நூலக சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து கவுன்சிலர் கோவை பாபு, மாநகராட்சியின் துறைரீதியான அதிகாரிகளை அழைத்து வந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பூங்கா மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் போதுமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் கோவை மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இன்று நடந்த ஆய்வின்போது 22-வது வட்டக்கழக செயலாளர் செல்வராஜ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கட்சியினர் உடன் இருந்தனர்.