பல்வேறு பணிகளுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் ஆய்வக பணியாளர்களை நியமித்து வரும் நிலையில் தங்களுக்கும் ஏதேனும் ஒரு துறையில் பணி நியமனம் வழங்கி உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர்.
கோவை: கோவையில் கொரோனா தொற்றின் போது பணியாற்றி வந்த பணியாளர்கள் சம்பளம் மற்றும் அரசு வேலை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை அரசு மருத்துவமனை சார்பில் கொரொனா தொற்று காலத்தில் (இரண்டாம் அலை) தடுப்பூசி செலுத்துதல், கோவிட் பரிசோதனை செய்தல் ஆகிய பணிகளைச் செய்து வந்த பணியாளர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இரண்டு மாத கால சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், தற்போது தங்களில் பணிக்காலம் முடிந்து விட்டதால் தங்களுக்கு அரசு சார்பில் மருத்துவ பணி வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், தங்களுக்கு இரண்டு மாத சம்பளம் இன்னும் தரப்படாததால் மிகவும் சிரமாக உள்ளதாகவும், தற்போது மருத்துவத்துறையில் பல்வேறு பணிகளுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் ஆய்வக பணியாளர்களை நியமித்து வரும் நிலையில் தங்களுக்கும் ஏதேனும் ஒரு துறையில் பணி நியமனம் வழங்கி உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர்.