ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க… கோவையில் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அட்வைஸ்..!

கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருவதால் வாகன ஓட்டிகளை மர நிழலில் அமர வைத்து போக்குவரத்து போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வருகின்றனர்.


கோவை: கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருவதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்குப் போக்குவரத்து போலீசார் அமரவைத்து அறிவுரை கூறி அனுப்பி வருகின்றனர்.

கோவை மாநகரில் பெருகிவரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதி மீறலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் விபத்துகள் ஏற்படுவதோடு, அதிகளவு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை அவினாசி சாலை, அண்ணா சிலை சிக்னலில் ஹெல்மெட் அணியாமல், வெள்ளை கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்துதல், சிக்னலில் பச்சை, மஞ்சள் விளக்குகளைத் தாண்டி சிவப்பு விளக்குகள் ஒளிர்ந்த பின்னரும் சிக்னலில் நிற்காமல் வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசியபடி வாகனம் இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை முறையாகக் கடை கடைப்பிடிக்காமல் சென்ற பத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளைப் பிடித்து சிக்னல் அருகே மரநிழலில் இருக்கை போட்டு அமர வைத்து அவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் அறிவுரைகளை வழங்கினர்.

போக்குவரத்து விதி மீறலால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் போலீசார்விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...