பழங்குடி கிராம மாணவர்கள் கல்வியை தொடர உதவும் காவல் துறை..!  கோவை சரக டிஐஜி முத்துச்சாமி விழிப்புணர்வு.

முருக்கம்பாடி என்ற பழங்குடி கிராமத்தில் உள்ள சிறுவர்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, கோவை சரக டிஐஜி முத்துச்சாமி தலைமையிலான போலீசார், நேரடியாக அந்த பழங்குடி கிராமத்திற்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை:கேரளா எல்லையில் உள்ள பழங்குடி கிராமத்தில் பாதியில் இடைநின்ற பழங்குடி கிராம பள்ளி மாணவர்களை கண்டறிந்து உதவும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக - கேரள எல்லையான,ஊட்டியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் முருக்கம்பாடி என்ற பழங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான சிறுவர்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, கோவை சரக டிஐஜி முத்துச்சாமி தலைமையிலான போலீசார், நேரடியாக அந்த பழங்குடி கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

அங்கு மொத்தம் எத்தனை பள்ளி மாணவர்கள் உள்ளனர், அதில் எத்தனை பேர் தங்கள் கல்வியை பாதியில் நிறுத்தி உள்ளனர், என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர். இதையடுத்து, கல்வி கற்க வேண்டிய அவசியம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்து போலீசார் பழங்குடி கிராம மக்களிடம் எடுத்துரைத்தனர். மேலும் அவர்கள் தங்களது படிப்பை தொடர என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது, என்பது குறித்தும் கேட்டறிந்தனர். 



இதையடுத்து, பழங்குடி கிராம மக்களுடன் காவல் துறையினர் கலந்துரையாடல் மேற்கொண்டனர். அப்போது, காவல்துறை சார்பில் தண்ணீர் டேங்க், போர்வைகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளையும்பழங்குடி மக்களுக்கு வழங்கினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...