கோவையில் நிலம் வாங்கி வீடு கட்டி தருவதாக மோசடி - தனியார் நிறுவன உரிமையாளருக்கு 10-ஆண்டு சிறை, ரூ.94.90-லட்சம் அபராதம்….!

மோசடி செய்த நிறுவன உரிமையாளருக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.94.90-லட்சம் அபராதம் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.


கோவை: கோவையில் நிலம், வீடு கட்டித்தருவதாகக் கூறி மோசடி செய்த, தனியார் நிறுவன உரிமையாளருக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 94-லட்சத்து 90-ஆயிரம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.

கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வந்த “கோவை லேன்டு பேங்கர்ஸ்” என்ற நிறுவனம், தங்களது நிறுவனத்தில் 3-ல் ஒரு பங்கு செலுத்தி முதலீடு செய்தால் நிலமும், வீடும் கட்டித்தருவதாகக் கூறி விளம்பரப்படுத்தினார்.

இதையடுத்து மீதம் உள்ள தொகையை தங்கள் நிறுவனமே வங்கி மூலம் கடன் பெற்றுத் தருவோம் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பி, பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்த படி நிறுவனம் சார்பில் எந்தவித நிலமும், வீடும் கட்டித்தரப்படாததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

அதில், 2016-ஆம் ஆண்டு கோவையை அருணாச்சலம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 73-முதலீட்டாளர்களிடம் ரூ.95.55 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், நிறுவன உரிமையாளர் முத்துக்குமாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.94.90 லட்சம் அபராதம் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...