கோவை பெரியநாயக்கன்பாளையம் - காரமடை சாலையில் உள்ள பெத்தான்டபுரம் பகுதியில் குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடிமைப்பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை அதிக விலைக்கு கேரளாவிற்கு மர்ம நபர்கள் விற்பனை செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்கும் வகையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் - காரமடை சாலையில் உள்ள பெத்தான்டபுரம் பகுதியில் குடோனில்ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடிமைப்பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த குடோனில் சுமார் 49 பைகளில் தலா 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு தெரியவந்தது. மேலும், மற்றொரு அறையில் சுமார் 12 பைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் குடோனில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர், அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த கணுவாய் சேர்ந்த மணிகண்டன் (36). காரமடை சேர்ந்த நந்தகுமார் (51). இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.