கோவை காரமடையில் குடோனில் பதுக்கி வைத்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் - காரமடை சாலையில் உள்ள பெத்தான்டபுரம் பகுதியில் குடோனில்  ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடிமைப்பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை அதிக விலைக்கு கேரளாவிற்கு மர்ம நபர்கள் விற்பனை செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்கும் வகையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் - காரமடை சாலையில் உள்ள பெத்தான்டபுரம் பகுதியில் குடோனில்ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடிமைப்பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, அங்கிருந்த குடோனில் சுமார் 49 பைகளில் தலா 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு தெரியவந்தது. மேலும், மற்றொரு அறையில் சுமார் 12 பைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் குடோனில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 



பின்னர், அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த கணுவாய் சேர்ந்த மணிகண்டன் (36). காரமடை சேர்ந்த நந்தகுமார் (51). இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...