கோவையில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றி வேட்டை - இருவர் கைது….!

கோவை காரமடை வனச்சரகம், வெள்ளியங்காடு சுற்று அருகே பிடிப்பட்ட இருவர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 9 மற்றும் 51(1) என்ற சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவுட்டு காய் என்ற நாட்டு வெடிகுண்டு கடித்து வெடித்ததில், காயமடைந்த பெண் குட்டியானை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனால், மாவட்டம் முழுவதும் வன எல்லைகளில் அவுட்டு காய் போன்ற நாட்டு வெடிகுண்டுகளை உள்ளதா? என வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை காரமடை வனச்சரகம், வெள்ளியங்காடு சுற்றுக்கு உட்பட்ட ஆதிமாதைனூர், கருப்பராயன் கோவில் அருகே உள்ள பள்ளத்தில் வன ஊழியர்கள் திடீரென இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு மூன்று பேர் காட்டுப்பன்றியை வெட்டி தனித்தனியாக கூறு போட்டுக் கொண்டிருந்தனர். வனத்துறை அதிகாரிகளை கண்டதும் கிட்டான் என்பவர் மட்டும் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து, அங்கிருந்த கவின் குமார் மற்றும் சின்னச்சாமி ஆகிய இருவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் நாட்டு வெடிகுண்டை வைத்து வன எல்லைக்கு வந்த காட்டு பன்றியை வேட்டையாடியதும், அதன்பிறகு பன்றியை கூறுபோட்டு தனித்தனியாக மூன்று பாகங்களாக பிரித்துக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பிடிப்பட்ட இருவர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 9 மற்றும் 51(1) என்ற சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், நாட்டு வெடிகுண்டுகளை எங்கு தயாரித்து வருகின்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...