கோவை விமான நிலையத்தில் ஓடுதளம் புனரமைப்பு பணிகள் துவக்கம்: இரவு 10:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை விமானங்கள் இயக்க தடை

விமான நிலையங்களில் ஓடுதளம் (ரன்வே), பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புனரமைப்பு செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், புனரமைப்பு பணி ஏப்ரல் முதல் வாரம் முதல் துவங்கியுள்ளது. இதன் காரணமாக, இரவு 10:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை விமானங்கள் இயக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்தில் ஓடுதளம் புனரமைப்பு பணிகள் துவங்கியுள்ள காரணத்தால், இன்று இரவு 10:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை கோவை விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையம், கோவை மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் முப்பத்தி மூன்று விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆண்டுதோறும் 30 லட்சம் மக்கள் விமான நிலையத்தை பயன்படுத்தினர்.

கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின், தற்போது மெல்ல விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தற்போது, தினமும் 20 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், விமான நிலைய ஓடுதளம் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டு உள்ள காரணத்தால் விமான சேவைகள் அனைத்தும் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:-

விமான நிலையங்களில் ஓடுதளம் (ரன்வே), பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புனரமைப்பு செய்யப்படுவது வழக்கம். கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஓடுதளம் (ரன்வே) புனரமைப்பு பணி ஏப்ரல் முதல் வாரம் முதல் துவங்கியுள்ளது. இதன் காரணமாக, இரவு 10:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை விமானங்கள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இரவு 11:30 மணி வரை விமான சேவை வழங்கப்பட்டது. ஓடுதள பராமரிப்பு பணி காரணமாக இரவு 10:00 மணிக்கு பின் இயக்கப்பட்டு வந்த விமானங்கள் அனைத்தும் இரவு 10:00 மணிக்கு முன்பே கோவையில் தரை இறங்கவும், மீண்டும் புறப்பட்டு செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதிகாஸை 3:30 மணியளவில் ஷார்ஜாவில் இருந்து கோவையில் தரையிறங்கி மீண்டும் 4:00 மணியளவில் கோவையிலிருந்து ஷார்ஜா புறப்பட்டுச் செல்லும் 'ஏர் அரேபியா' விமானம் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமான சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், எமர்ஜென்சி காரணமாக ஏதேனும் விமானம் தரை இறங்க அனுமதி கேட்டால் அதற்கு அனுமதி அளிக்கப்படும். அதற்கேற்ப தயார் நிலையில் ஓடுதளம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...