கோவை மாநகராட்சியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் என்ற சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அங்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.



கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.



அங்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை எனவும் 10 ஆண்டுகளாக கலைஞரால் கொண்டு வரப்பட்ட திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டினார்.

அவ்வாறு கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை முதல்வர் ஆய்வு செய்து விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கோடையில் 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்ய 72,000 டன் நிலக்கரி தேவை என்றும், ஆனால் 48-50 ஆயிரம் டன் நிலக்கரி தான் ஒன்றிய அரசு வழங்குகிறது. இந்த நிலக்கரி பற்றக்குறையை போக்குவதற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு மின் தேவையை பூர்த்தி செய்யவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

கோவை திருச்சி சாலையில் மேம்பால பணிகள் தேங்கி இருப்பதற்கு, வழக்குகளே காரணம் என தெரிவித்த அமைச்சர், அவர் வழக்கு தாக்கல் செய்தவர்களிடம் அழைத்து பேசியதாகவும் மீண்டும் அவர்களை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்காமலேயே மேம்பால பணிகள் நடைபெற்றது தான் இந்த தாமதத்திற்கு காரணம், என்று தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை முதல்வர் தனி கவனம் செலுத்தி வருவதாகவும், என்னென்ன திட்டங்கள் தேவை என்பதை கேட்டு நிறைவு செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சீரான முறையில் தண்ணீர் கிடைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவாக அந்த பணிகள் முடிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் என்ற சிறப்புத் திட்டம் கோவை மாநகராட்சிக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தைப் பொறுத்தவரை நிதி ஆதாரம் பெறப்பட்டு அதன் பின்னர் திட்டம் நிறைவேற்றப்படும், என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...