கோவையில் பள்ளி மாணவனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: 2-பிரிவில் வழக்குப்பதிவு….!

3-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மீது குழந்தை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



கோவை: கோவை செம்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்உதவி தலைமை ஆசிரியர் மீது குழந்தை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை செம்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் 3-ஆம் வகுப்பு சிறுவனைக் கடந்த மார்ச் 29 ஆம் தேதி, கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தாகவும், கேட்கச் சென்ற மாணவனின் தாயைப் பார்த்து அறுவெறுப்பாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறியதாகச் சிறுவனின் தாயார் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர், பேரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர், ஆலாந்துறை காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் செம்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்குச் சென்று பள்ளி குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.



பள்ளிச் சிறுவனைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்ததோடு, மாணவனின் தாயை மரியாதைக் குறைவாக நடத்திய அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, உதவி தலைமை ஆசிரியர் தங்க மாரியம்மாள் ஆகிய இருவர் மீதும் sc/st வன்கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...