உடல் உறுப்புகள் திருட்டு? கொலை மிரட்டல் விடுத்த தனியார் மருத்துவமனை? பாதிக்கப்பட்ட பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!

தனது தாயின் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாக தான் அளித்த புகாருக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருடன் புகார் மனு அளித்தார்.



கோவை: உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாகத் தனியார் மருத்துவமனை மீது புகாரளித்து பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.



திருப்பூர் மாவட்டம் உடுமைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீணா தனது அம்மாவைக் கடந்த 2020-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாகக் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரது தாயார் உயிரிழந்த நிலையில் தனது தாயாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தனது அம்மாவின் உடல் உறுப்புகளைத் திருடி விட்டதாகச் சந்தேகம் உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். மேலும் இவருக்கு ஆதரவாக சில அமைப்புகளும் போராட்டம் நடத்தினர்.



இந்நிலையில் தான் அளித்த புகாருக்கு இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருடன் புகார் மனு அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தனது அம்மாவை அம்மருத்துவமனையினர் கொலை செய்து விட்டதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், உட்படப் பலரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அம்மருத்துவமனையிலிருந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...