'கோடைக்கால குடிநீர் தட்டுப்பாடு'... கோவையில் குடிநீர் விநியோகம் என்பதே பெரும் சவாலாக உள்ளது: கவுன்சிலர் தனலெட்சுமி

இன்றைய சூழலில் குடிநீர் விநியோகம் என்பதே பெரும் சவாலாக உள்ளது என கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவரும் 94-வது வார்டு கவுன்சிலருமான தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தெற்கு மண்டல தலைவரும் 94-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தனலெட்சுமி குடிநீர் விநியோகம் என்பதே பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தொடர்ச்சியான புகார்கள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றது. மேலும், வார்டுகளுக்கு இடையே சரிசமமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும் பரவலாகக் குற்றம்சாட்டப்படுகின்றது.

இதுகுறித்து கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவரும் 94-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தனலெட்சுமி கூறியதாவது:-

கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் முன்வைக்கும் மூன்று முக்கிய கோரிகைகள் குடிநீர், சாலைகள் சீரமைத்தல், பாதாளச் சாக்கடை அமைத்து தருவதாகவே உள்ளது. இதில் குடிநீர் தட்டுப்பாடு என்பது அனைவரின் முக்கிய கோரிக்கையாக இருக்கின்றது என தெரிவித்தார்.

மேலும், ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால் இதனைக் குறித்து உதவி பொறியாளரிடம் கேள்வி எழுப்பியதற்கு, விளக்கவுரையும் தண்ணீர் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும், 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் என தெரிவித்தார். குடிநீர் பிரச்சனைக்கு அடுத்தபடியாக கவனிக்க வேண்டிய சாலை சீரமைத்தல் என்பது பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை மேம்படுத்திய பிறகு சாலை சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...