கோவையில் 'இல்லம் தேடி மருத்துவம்' பணியாளர்கள் மனு; சம்பள நிலுவை, ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

மாத சம்பளத்தை உயர்த்தி தர கோரியும் நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தர வலியுறுத்தியும், கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட "இல்லம் தேடி மருத்துவம்", பணியாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: மாத சம்பளத்தை உயர்த்தி தர கோரியும் நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தர வலியுறுத்தியும், கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட இல்லம் தேடி மருத்துவம் பணியாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம், மக்களின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருந்து சேவைகளான - ரத்த அழுத்த நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல் இயன்முறை சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.



இந்தநிலையில், இல்லம் தேடி மருத்துவம் பணியாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், தங்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 4500 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை உயர்த்தி தர வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அனைத்து நாட்களுமே தங்களை பணிக்கு வர கட்டாயப்படுத்துவதாக தெரிவித்த அவர்கள், முன்களப்பணியாளர்களான தங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டனர்.



"உடனடியாக, எங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும். இல்லையெனில், முத்ல்வரை நேரில் சந்திக்க உள்ளோம்", என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...