கோவையில் காதல் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது - மது போதையில் உளறிய போது சிக்கினார்.

கோவையில் 10 ஆண்டுகள் காதலித்து, 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை போத்தனூர், காமராஜர் நகர் பகுதியில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த நாகார்ஜூன் என்ற ஆட்டோ ஓட்டுநரை, போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் காமராஜர் நகர் பகுதியைசேர்ந்த ராமசாமி என்பவரது மகன் நாகார்ஜூன். ஆட்டோ ஓட்டுநரான இவர்,அதே பகுதியை சேர்ந்த சர்மிளா என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து, கடந்தநான்கு மாதங்களுக்கு முன்புதிருமணம் செய்துள்ளார்.

அவர்களது திருமணத்தை வீட்டில் யாரும் ஏற்று கொள்ளாததால்,சுந்தராபுரம் காந்திநகர் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சர்மிளா தனது செல்போனில் சந்தேகத்திற்கிடமாக யாரிடமோ பேசி வருவதாக நாகார்ஜூன் சந்தேகம் அடைந்து, இது குறித்து தட்டிக்கேட்டு வந்ததால்,இருவருக்குமிடையே தொடர் பிரச்சினை இருந்து வந்துள்ளது.



இதனிடையே, நேற்று பிற்பகல் வீட்டிற்கு சென்ற நாகார்ஜூன் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சூழலில் திடீரென அங்கிருந்த கத்தியை எடுத்து சர்மிளாவை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.

பின்னர், வழக்கம்போல் இரவில் மது அருந்த சென்ற நாகார்ஜூன், போதையில் தனது நண்பர்களிடம் இது குறித்து பேசிய நிலையில், மனைவியை கொலை செய்தது அம்பலமானது. பின்னர், அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து சென்ற போத்தனூர் காவல்நிலைய போலீசார், சுந்தராபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த நாகார்ஜூனை கைது செய்தனர்.



மேலும், வீட்டில் சடலமாக கிடந்த சர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்து ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த இளம் பெண்ணை நான்கே மாதத்தில், சந்தேகத்தின் பேரில் கொலை செய்த சம்பவம் சுந்தறாபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...