கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து ரூ.2 லட்சம் பணம், தங்க மோதிரம் திருட்டு - போலீசார் விசாரணை…!

மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து நோயாளியின் பணத்தை எடுத்துவிட்டு வெளியே சென்றது தெரியவந்தது.


கோவை: கோவை சாய்பாபா காலணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்துநோயாளியின் ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க மோதிரத்தை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோவைப்புதூர் இ.பி காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் இவரது மகன் ராஜேஷ் சுப்பிரமணியம் (43). இவர் கத்தார் நாட்டில் விமானியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு முதுகு தண்டுவட பிரச்சனை காரணமாக தற்போது கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி ராஜேஷ் சுப்பிரமணியத்துக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகத் தெரிகிறது.

அப்போது அவரது அறையிலிருந்து அறுவை சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரது அறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் உள்ளே வைத்திருந்த ரூ 2 லட்சம் பணம் மற்றும் தங்க மோதிரங்களைத் திருடித் தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் வந்து பார்த்தபோது பணம் மற்றும் நகை மாயமானது தெரியவந்தது. பின்னர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து பணத்தை எடுத்துவிட்டு வெளியே சென்றது தெரியவந்தது.



இதையடுத்து ராஜேஷ் சுப்பிரமணியம் சாய்பாபா காலணி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில்வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...