கோவை அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்டிசம் நிலைப்பாடு உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



மருத்துவமனை முதல்வர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 3 வயதிற்குள்ளாக குழந்தைகளிடம் காணப்படும் செயல்பாடுகளை கண்டறிந்து உரிய பரிசோதனைகள் மூலம் ஆட்டிசம் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து, துவக்க நிலையிலேயே உரிய பயிற்சிகளை வழங்கினால், வழக்கமான வாழ்க்கைக்கு குழந்தைகளை பயிற்றுவிக்க முடியும் என எடுத்துக் கூறப்பட்டது.

மேலும், பெற்றோர்களின் அனுபவங்கள் மற்றும் பயிற்சி பெற்று வரும் ஆட்டிசம் குழந்தைகளின் செயல்திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெரபிஸ்டுகள் எனப்படும் பயிற்றுநர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்களுக்கு, ஆட்டிசம் பாதிப்பு என்பது நோயல்ல என்பது குறித்தும், பாதிப்பு கண்டறியப்பட்டால், அக்குழந்தைகளை ஒதுக்காமல், வழக்கமான அன்புடன், கூடுதல் கவனிப்பையும் வழங்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

உலகில் 44 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகவும், ஆட்டிசம் பாதிப்புள்ள நான்கு குழந்தைகளில் 3 பேர் ஆண் குழந்தைகள் என்பது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...