கோவையில் இந்திய ம‌ருத்துவ ச‌ங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு த‌ழுவிய‌ போராட்ட‌ம்..!

ம‌ருத்துவ‌ர்க‌ளை குற்ற‌வாளிக‌ளாக‌ ப‌திவு செய்யும் இந்திய‌ த‌ண்ட‌னை ச‌ட்ட‌த்தின் பிரிவுகளை மாற்ற‌ வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.



கோவை: கோவையில் இந்திய ம‌ருத்துவ ச‌ங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு த‌ழுவிய‌ போராட்ட‌ம் நடைபெற்றது.

ராஜ‌ஸ்தான் மாநில‌த்தில் டாக்ட‌ர் அர்ச்ச‌னா ச‌ர்மா ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிர‌ச‌வ‌த்திற்கு பின் அதிக‌ இர‌த்த‌போக்கு ஏற்பட்டது. ம‌ருத்துவ‌ர் எவ்வ‌ளவோ முய‌ன்றும் அந்த‌ பெண்ணின் உயிரைக் காப்ப‌ற்ற முடிய‌வில்லை.

இந்த‌ நிலையில், இற‌ந்த‌ பெண்ணின் உற‌வின‌ர்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் ம‌ற்றும் போராட்ட‌ம் ந‌ட‌த்தினர். காவ‌ல்துறை அதிகாரிக‌ள் ம‌ருத்துவ‌ர் மீது கொலை வ‌ழ‌க்கு ப‌திவு செய்த‌ பின்ன‌ர் உட‌லை வாங்கி சென்றனர்.

ம‌ருத்துவ‌ர்க‌ள் மீது வ‌ழ‌க்கு ப‌திவு செய்யும் போது வ‌ழிமுறைக‌ளை க‌டைபிடிக்க‌ வேண்டும் என்று உச்ச‌ நீதிம‌ன்றம் அறிவுறுத்தியுள்ள‌து. ஆனால், காவ‌ல் துறை அதைக் க‌ருத்தில் கொள்ளாம‌ல் ந‌ட‌வ‌டிக்கை எடுத்துள்ளது. இத‌னால் ம‌னஉலைச்ச‌லும், வேத‌னையும் அடைந்த‌ ம‌ருத்துவ‌ர் அர்ச்ச‌னா த‌ற்கொலை செய்துகொண்ட‌ர். இதனால் நாடு முழுவ‌தும் ம‌ருத்துவ‌ர்கள் க‌டும் அதிர்ச்சியில் உள்ள‌ன‌ர்.

இதனால் இந்திய ம‌ருத்துவ ச‌ங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு த‌ழுவிய‌ போராட்ட‌ம் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவையில் காலை 8 ம‌ணிமுத‌ல் மாலை 6 ம‌ணி வ‌ரை அவ‌ச‌ர‌ம் இல்லாத ம‌ருத்துவ‌ ப‌ணிக‌ளை நிறுத்திவிட்டு பல்வேறு கோரிக்கைக‌ளை வ‌லியுறுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது அவர்கள் பேசுகையில், ம‌ருத்துவ‌ சிகிச்சை அளித்த‌ ம‌ருத்துவ‌ர் ச‌ர்மா மீது தவ‌றான‌ வ‌ழ‌க்கு ப‌திவு செய்த‌ காவ‌ல் துறை அதிகாரிக‌ள் மீது உட‌ன‌டியாக‌ கைது செய்து வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌ வேண்டும். அவ‌ரின் குடும்ப‌த்திற்கு போதிய‌ இழ‌ப்பீடு வ‌ழ‌ங்க‌ வேண்டும். ம‌ருத்துவ‌ர்க‌ளுக்கு எதிரான‌ வ‌ன்முறையை த‌டுக்க‌வேண்டும்.



ம‌ருத்துவ‌ர்க‌ளை குற்ற‌வாளிக‌ளாக‌ ப‌திவு செய்யும் இந்திய‌ த‌ண்ட‌னை ச‌ட்ட‌த்தின் பிரிவுகளை மாற்ற‌ வேண்டும். மேலும் ம‌ருத்துவ‌ ப‌ணிக‌ளை ப‌ய‌மில்லாம‌ல் செய்ய‌வும், ம‌ருத்துவ‌துறை சார்ந்த‌ அறுவை சிகிச்சைக‌ளை த‌ய‌க்க‌ம் இல்லாமல் செய்ய‌ வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...