விறகு சேகரிக்க சென்ற அவர், வனப் பகுதிக்குள் திசைமாறி சென்றதையடுத்து, தற்போது வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவை வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் பகுதியில் நேற்று வனப்பகுதியில் காணாமல் போன பெண் தொழிலாளி மீட்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் பகுதியில் நேற்று தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து மதிய உணவு இடைவேளையில் விறகு சேகரிக்க சென்ற சந்திரா (53) என்ற பெண்ணை காணவில்லை.

இதையடுத்து, வனத்துறையினர், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில், இன்று மதியம் அந்தப் பெண் சின்னகள்ளாறு எஸ்டேட்பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் விறகு சேகரிக்க சென்று வழி தவறி, திசை மாறி, வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்து, வன பகுதிக்குள் நெடுந்தூரம் சென்று இரவு நேரத்தில் வன விலங்குக்கு பயந்து பெரிய பாறை இடுக்கில் படுத்து தூங்காமல் இருந்து காலையில் எழுந்து தண்ணீர் ஓடை செல்லும் வழியில் சென்று சின்னகள்ளாறு எஸ்டேட் பகுதிக்கு வனப் பகுதி வழியாக சென்று உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பெண் ஒருவர் காணவில்லை என்ற தகவல் சின்னகள்ளாறு பகுதி பொது மக்களுக்கு தெரிந்ததால் அந்த பெண்ணை மீட்டு உணவு வழங்கி பாதுகாப்பாக வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.