கோவையில் ரூ.1-கோடி கடன் தருவதாக கூறி, ரூ.25-லட்சம் மோசடி - இருவர் கைது..!

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி பணத்துடன் மாயமான இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 6-லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாகக் கூறி ரூ.10-லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து பறித்து சென்ற இருவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, டிரை புரூட்ஸ் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். தொழில் நிமித்தமாக ஒரு கோடி ரூபாய் கடன் பெற முயன்ற போது, அவருக்கு வந்த குறுஞ்செய்தி ஒன்றில் கமிசனுக்கு கடன் பெற்றுத்தரப்படும் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது கோவையைச் சேர்ந்த கவுதம் என்பவர் பணம் ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளார். இதற்காக தனக்கு ரூ.25-லட்சம் ரூபாய் கமிசன் தர வேண்டும் என அவர் கூறியதை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து ஸ்ரீதேவியின் மகன் ரமணா என்பவர் மூலம் பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரி அருகே வருமாறு அவர்கள் கூறியதை அடுத்து ரமணா அங்கு வந்த போது, கவுதம் உள்ளிட்ட இருவர் அட்டைப் பெட்டி ஒன்றைக் கொடுத்து அதில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனை நம்பி ரமணா அவர்களிடம் 10-லட்சம் ரூபாய் பணம் இருந்த பையைக் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட இருவரும் அங்கிருந்து உடனே இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ரமணா பெட்டியைப் பிரித்துப் பார்த்த போது, அதில் சில பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிரஷ்கள் மட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்களை துரத்திச் செல்ல முயன்ற போதும், அவர்கள் கிடைக்காததால் இது தொடர்பாகக் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி பணத்துடன் மாயமான இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கவுதம் என்ற போலியான பெயரை பயன்படுத்தியதும், அவர்கள் சுந்தராபுரத்தை சேர்ந்த ஜனகன்(42) மற்றும் செட்டி பாளையத்தைச் சேர்ந்த மார்டின் அமல்ராஜ்(42) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரமணா புகாரில் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறியிருந்த நிலையில், அவர் கொடுத்த பையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பது தெரியவந்தது.

மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜனகனும், மார்ட்டினும் மோசடியாகப் பெற்ற பணத்தைக் கொண்டு, தங்களது கடன்களை அடைத்துவிட்டு, நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டாடியதும் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...