கோவையில் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 'சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா' நிகழ்ச்சி..!

கோவை வ.உ.சி மைதானத்தில் மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை 7 நாட்கள் விழா நடைபெறுகின்றது.


கோவை: கோவை மாநகராட்சி வ.உ.சி மைதானத்தில் 75வது இந்திய சுதந்திர தினவிழாவை அடுத்து "சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா" மார்ச் 31ம் தேதி துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது.



கோவை மாநகராட்சி, வ.உ.சி மைதானத்தில் 75வது இந்திய சுதந்திர தினவிழாவை அடுத்து "சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா" அதனை முன்னிட்டு இன்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் ராஐகோபால் சுன்காரா ஆகியோர் பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை துவங்கிவைத்தனர்.



பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மார்ச் 31ம் தேதி துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது. இந்நிகழ்ச்சியானது கோவை மாவட்டம் செய்தி தொடர்புத் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வண்ணம் கோவை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படத்தொகுப்பு அமைக்கப்பட்டிருந்தது.



மேலும், மக்கள் பார்வைக்காக கோவை மாவட்ட தமிழ்நாடுமாசுகட்டுபாட்டு வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடைபராமரிப்புதுறை மற்றும் மருத்துவத்துறைகளின் மூலம் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...