கோவை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற தேர்தலில், நியமனக் குழு உறுப்பினராக 91 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் இன்று நிலைக்குழு தலைவர் மற்றும் நியமனக்குழு உறுப்பினருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்த தேர்தலானது, கோவை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதில், நியமனக் குழு உறுப்பினர்கள் தேர்தல் காலை நடைபெற்றது. தேர்தலில், 91 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நியமனக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து, நடைபெற்ற நிலைக்குழு தலைவர்களுக்கான தேர்தலில் 59 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தீபா தளபதி இளங்கோ, கணக்கு குழு தலைவராகவும்,

80 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாரிச்செல்வன் பொது சுகாதார குழு தலைவராகவும்,

34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாலதி நாகராஜ் கல்வி குழு தலைவராகவும்,

82வது வார்டு மாமன்ற உறுப்பினர் முபசீரா வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவராகவும்,

63வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி முருகன் பணிகள் குழு தலைவராகவும்,

72வது வார்டு மாமன்ற உறுப்பினர் சந்தோஷ் நகரமைப்பு குழு தலைவராகவும் நியமிக்கபட்டனர்.
பிற மாமன்ற உறுப்பினர்களால் தேர்தெடுக்கப்பட்ட நிலைக்குழு தலைவர்கள் மற்றும் நியமனக்குழு உறுப்பினருக்கான சான்றிதழை கோவை மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.