கோவை அரசு மருத்துவமனை கொரோனா பிரிவு தற்காலிக செவிலியர்கள் தரையில் அமர்ந்து அமைதி போராட்டம்.!!

மாத சம்பளத்தைப் பெற்றுத் தர வலியுறுத்தி கொரோனா பிரிவு தற்காலிக செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து அமைதி போராட்டம் நடத்தினர்.



கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பிரிவு தற்காலிக செவிலியர்கள்தரையில் அமர்ந்து அமைதி போராட்டம் நடத்தினர்.



கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் தற்காலிக செவிலியர்களாக பணியாற்றி வரும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு 3-மாத கால சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், அதனைப் பெற்றுத் தர மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் என்றும் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வந்திருந்தனர்.



நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அரசு நிகழ்விற்காக வெளியில் சென்றிருந்த காரணங்களால் அவரை சந்திக்க இயலாமல் மனு அளித்து விட்டுச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களது கோரிக்கையை அவரிடம் தெரிவித்து விட்டுச் செல்வோம் எனக் கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து காத்திருக்கின்றனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...