கோவை மதுக்கரை அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி நீரில் மூழ்கி பலி.!

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே விவசாயி ஒருவர் தோட்டத்திலிருந்த கிணற்றைச் சுற்றி தூய்மை செய்த போது, தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை அறிவொளிநகர் பாலு நாயக்கர் தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (53) விவசாயி. திருமணமாகி மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் மாலை முருகேசன் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே இருந்த புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக முருகேசன் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

இதில் கிணற்றின் சுவர் மீது மோதியதில் காயமடைந்த அவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீண்ட நேரமாக முருகேசன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர் பெண் சத்யா என்பவர் கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது முருகேசன் சடலமாக இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து அவர் சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் வந்து கிணற்றில் இறங்கி முருகேசன் உடலை மேலே கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகேசன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...