கோவை மாநகராட்சி மண்டல தலைவர் தேர்தல் : 5-தலைவர்களும் போட்டியின்றி தேர்வு..!

இதையடுத்து மண்டல தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டார்களுக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றிச் செல்வன் வாழ்த்து கூறினார்.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலத்திற்கான தலைவர்களாக திமுக கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100-வார்டுகளில், 96-வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக 3-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றனர். இதையடுத்து கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயராக வெற்றிச் செல்வன் தேர்வு செய்யப்பட்டனர்.



இந்நிலையில் கோவை மாநகராட்சியில் மண்டல தலைவருக்கான தேர்தல் கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3-அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கான வேண்டாளர்களை திமுக தலைமை கழகம் அறிவித்தது.



அதன் படி கோவையில் உள்ள 5-மண்டலங்களில், கிழக்கு மண்டல தலைவராக 52 -வது வார்டு திமுக கவுன்சிலர் லக்குமி இளஞ்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



அதே போல வடக்கு மண்டல தலைவராக 10-ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஆட்டோ ஓட்டுநராகவும் உள்ள கதிர்வேல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



தெற்கு மண்டல தலைவராக 95-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



மேற்கு மண்டல தலைவராக 36-வது வார்டு திமுக கவுன்சிலர் தெய்வானை தமிழ்மறை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



மேற்கு மண்டல தலைவராக 42-வது வார்டு திமுக கவுன்சிலர் மீனா லோகு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழ்களை கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜாகோபால் சுன்காரா வழங்கினார்.

இதையடுத்து மண்டல தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டார்களுக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றிச் செல்வன் வாழ்த்து கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...