கோவை வெள்ளலூரில் சமூக விரோத செயல்களை தவிர்க்கும் வகையில் போலீஸ் - பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

கல்வியை பாதியில் நிறுத்திய இளைஞர்களை மீண்டும் படிக்க வலியுறுத்தியோடு, அதற்கு தேவையான உதவிகளை செய்ய போலீசார் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.


கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் போத்தனூர் சரக காவல் உதவி ஆணையாளர் தலைமையில் சமூக விரோத செயல்களை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை போத்தனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட போத்தனூர், ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைகளில், நடந்து வரும் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை, அடிதடி போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளலூர் அடிக்கு மாடி குடியிருப்பு அருகே, கக்கன் நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மற்றும் பொதுமக்களை அழைத்து, இந்த சமூக விரோத செயல்களால் ஏற்படும் பிரச்சனைகள், இளைஞர்களின் எதிர்கால நிலைகள் குறித்து மாநகர போலீசார் விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதேபோல, கல்வியை பாதியில் நிறுத்திய இளைஞர்களை மீண்டும் படிக்க வலியுறுத்தியோடு, அதற்கு தேவையான உதவிகளை செய்ய போலீசார் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

போத்தனூர் சரக உதவி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போத்தனூர் ஆய்வாளர் நடேசன், உதவி ஆய்வாளர் தாமரை கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...