கோவையில் கல்லூரி செமஸ்டர் கட்டணம் செலுத்த பெண்ணிடம் செயின் பறிப்பு - மாணவர்கள் இருவர் கைது..!

மேலும், அவர்களிடம் இருந்து 6 சவரன் செயின்கள் மற்றும் செயின் பறிக்க பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் கல்லூரி செமஸ்டர் கட்டணம் செலுத்த பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலணி பகுதியை சேர்ந்தவர் ராசாத்தி. இவர் கடந்த 15ம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில், இருகூர் அருகே சென்ற சென்ற போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ராசாத்தி அணிந்திருந்த செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்டண விசாரணையில் பிடிபட்ட இருவரும் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்தது. பிரகாஷ் இரண்டாம் ஆண்டு, தமிழ் செல்வன் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாகவும், இருவரின் தந்தையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், கல்லூரி செமஸ்டர் கட்டணம் செலுத்த சிரமப்பட்டு வந்ததாகவும், இதனால் கடந்த 15ம் தேதி இரண்டு பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், செயினை தனது சக நண்பரிடம் கொடுத்து தனது தாயின் நகை என கூறி, விற்று ரூ.1 லட்சம் பணத்தை வாங்கி 2 செமஸ்டர் கட்டணம் செலுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 6 சவரன் நகைகளையும், செயின் பறிக்க பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...