இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே மூலக்கடையில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி, இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் வீரப்பகவுண்டனூர் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு சிங்கையன்புதூர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, மூலக்கடை பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் அய்யாசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் அய்யாசாமி மற்றும் விபத்தை ஏற்படுத்திய ஜெயராமன் ஆகிய இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, இருவரையும் மீட்ட அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
மேலும், இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.