கோவையில் வாங்கிய கடன் தொகைக்கு மேல் பணம் கேட்டு மிரட்டும் தனியார் மைக்ரோ பைனான்ஸ் - மகளிர் குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த மகளிர் குழுவினர் தனியார் மைக்ரோ பைனான்ஸில் அநியாய வட்டி வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு.



கோவை: கோவையில் வாங்கிய கடன் தொகைக்கு மேல் மேலும் பணம் கேட்டு மிரட்டும் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகளிர் குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை வெங்கட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து மகளிர் குழு அமைத்து தனியார் மைக்ரோ பைனான்ஸில் கடன் பெற்று தொழில் புரிந்து வருகின்றனர்.



இந்நிலையில், தனியார் மைக்ரோ நிர்வாகத்திடம் ரூ.40 ஆயிரம் கடன் பெற்று மாதம் ரூ. 2050 வீதம் 15 தவணைகள் செலுத்திய நிலையில், மேலும் 51 ஆயிரம் கட்ட வேண்டும் என அநியாய வட்டி விதித்து வசூலிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், கடன் தொகை கேட்டு அடாவடியாகவும், மரியாதைக் குறைவாகவும், அந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் பேசுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...