9-பேர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தலின் போது ஏற்பட்ட மோதலில் திமுக கவுன்சிலரின் கணவரைத் தாக்கிய அதிமுக பேரூராட்சி தலைவர் மகன் உட்பட 9-பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் துவங்குவதற்கு முன் திமுக -அதிமுக கவுன்சிலர்கள் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகம் வந்த போது, திமுக - அதிமுக கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர். இதில் திமுக 4-ஆவது வார்டு கவுன்சிலர் குணசுந்தரி கணவர் செந்தில்குமார் மண்டை உடைந்தது. மேலும் பார்த்திபன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திமுகவினர் கொடுத்த புகார் அடிப்படையில் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலத்தின் மகன் குமரேசன், உட்படச் சபரி பிரியன், கரிகாலன், கார்த்திக்ராஜா, மனோஜ் குமார், இரகுபதி, சண்முகம், சவுந்திரராஜ், நாகராஜ் ஆகிய 9-பேர் மீது 147,148, 341,342, 324, 506/2, மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.