கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு எதிரே ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயிலின் பின்புறம் வசிக்கும் பழனிச்சாமி என்பவர் ஆக்கிரமித்துக் கட்டிய சுவர் இடிப்பு.
கோவை: கோவை கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டிய சுவரை இடித்து வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு எதிரே ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோயிலின் பின்புறம் வசிக்கும் பழனிச்சாமி என்பவர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சுவர் கட்டியுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கோவில் நிலத்தில் கட்டிய சுவரை அகற்றக்கோரி சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு நிலத்தை அளந்து பார்த்ததில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சுவர் கட்டியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்று ஆக்கிரமித்துக் கட்டிய சுவரை கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுவர் இடித்து அகற்றப்பட்டது.

இதில் சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் ராமராஜ், வருவாய் ஆய்வாளர் லலிதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் என பலர் உடனிருந்தனர்.