நரசீபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 84-லட்சம் செலவில் கட்டப்பட்ட வகுப்பறைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.!!

நரசீபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சார்பில் 84-லட்சம் செலவில் கட்டப்பட்ட 8-வகுப்பறைகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.


கோவை: நரசீபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் கட்டப்பட்ட வகுப்பறைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தனியார் அமைப்பு சார்பில் (ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர்) 84-லட்சம் செலவில் 8-வகுப்பறைகள்கட்டப்பட்டன. அந்த 8-வகுப்பறைகளையும் இன்றுமின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.



இவ்விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன்பேசுகையில், முதல்வரின் நமக்கு நாமே திட்டத்திற்குக் கோவை மாவட்டமே எடுத்துக்காட்டாக இருக்கும். கோவை மாவட்டத்தில் தற்போது மூன்று கோடிக்கான பணிகளுக்கான அரசாணை பெற்றுள்ளது என தெரிவித்தார்.



அதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இப்பள்ளி மாணவிகளிடத்தில் என்ன தேவை கேட்டபோது, கூடுதலாக பாடப்பிரிவுகள் தேவை எனகூறியதாகவும், விரைவில் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கூடுதல் பாடப்பிரிவுகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் இங்குகாலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



மேலும், ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் தொகை மூலம் மேலும் கட்டிடம் கட்டியவர்களுக்குப் பாராட்டுகள் என வாழ்த்துக் கூறினார். இந்நிகழ்வில் அப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...